கவிதைகள்
கவிதை
இதுவரை நான்
எழுதாத கவிதை
உன் சிரிப்பு
இனிமேல் என்னால்
எழுத முடியாத கவிதை
உன் வெட்கம்.
இரவு
நினைவுக்குள்
நீ இருக்க
கவிதைக்குள்
நான் இருக்க
உறங்காமல்
விடிந்தது இரவு.
கோபம்
போர் தொடுக்கும்
என் காதலுக்கு முன்
தோற்றுப் போகும்
உன் பொய்க்கோபம்
பிரிவு
உன் நினைவுகளை
என் அறை முழுவதும்
பரப்பி வைத்திருக்கிறேன்
உன் பிரிவு
என்னை வருத்தாமலிருக்க..