கவிதைகள்

 இன்பம்

எழுதுவது என்றும்
இன்பம் அதை வாசிக்கும்
கண்கள் உன்னுடையதாய்
இருப்பின்..

 

 பயணம்

என்றோ ஒருநாள்
எனக்காக பேருந்தில்
நீ வாங்கிய பயணச்சீட்டு
தினமும் பயணிக்கிறது
என்னுடன்..

 

 கவிதை

உன் நினைவுகளை
கவிதையென்றும்
காதலென்றும்
புலம்புகிறது என்
இதயம்.
.

 

 கருப்பொருள்

நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் கவிதைக்கு
கருப்பொருளாகிறது..